இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.“திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்”எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.
11/30/2013
9/08/2013
அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா ?
.jpg)
\எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான்
9/07/2013
உங்கள் கைபேசிஎண் மறந்துவிட்டதா ?
அன்பு நண்பர்களே உங்கள் கை பேசி எண் மறந்துவிட்டதா கவலைவேண்டாம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு இரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தின் கைபேசி இருக்கிறதோ அந்நிறுவனத்தின் இரகசிய எண்ணை உங்கள் கைபேசில் இட்டு அழைப்பு கொடுத்தல் சில வினாடிகளில் கைபேசி எண் தெரியும்
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
அன்புடன்: அதிரைதாஜ்
8/30/2013
Torch உலாவி - யூடுப் வீடியோ மற்றும் டோரன்ட் நேரடியாக பதிவிறக்கம் செய்ய
இணைய பக்கங்களை வலம்வர உலாவிகள் பயன்படுகிறன. முன்னனியில் உள்ள இணைய உலாவிகளான நெருப்புநரி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், சபாரி மற்றும் ஒபேரா போன்றவை அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. தற்போது மென்பொருள் சந்தைக்கு புதிய வரவான உலாவி டார்ச் மிகவும் பயனுள்ளதாகவும் பல்வேறு வசதிகள் நிறைந்துள்ளதாகவும் உள்ளது. இந்த டார்ச் உலாவியின் துணையுடன் இணைய பக்கங்களை மிக வேகமாக வலம் வர முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி

8/27/2013
6/13/2013
விண்டோஸ் 8 துவக்க பொத்தானை பயன்படுத்த எளிய வழி?
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் கீ இல்லாமல், பலர் முகம் சுழிக்கின்றனர். ஏறத்தாழ, அதன் செயல்பாட்டினைப் பெறும் சிறிய வழி ஒன்று உள்ளது. விண்டோஸ் கீயை அழுத்தி, கீ போர்டில் எக்ஸ் (X) கீயினைச் சேர்த்து அழுத்தவும். திரையின் கீழாக, வலது புறத்தில், ஸ்டார்ட் ஸ்கிரீன் அருகே, சிறிய விண்டோ ஒன்று பாப் அப் ஆகும். இந்த விண்டோவில், நாம் வழக்கமாகக் காணும் Desktop, Control Panel, File Explorer, Task Manager, Programs ஆகியவை கிடைக்கும். இதன் மூலம், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் தயக்கமான செயல்பாடுகள் நீங்கும்
அன்புடன்: அதிரைதாஜ்
5/25/2013
அதிரைதாஜ்: ஷிர்க் பித்அத் புரியும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்6 ...
அதிரைதாஜ்:
ஷிர்க் பித்அத் புரியும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்6 ...: ஷிர்க் பித்அத் புரியும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் 6 COMMENTS in அழிவுப் பாதை , இணைவைத்தல் , பித்அத் , வீடியோ
ஷிர்க் பித்அத் புரியும் சுன்னத் வல் ஜமாஅத்தினர்6 ...: ஷிர்க் பித்அத் புரியும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் 6 COMMENTS in அழிவுப் பாதை , இணைவைத்தல் , பித்அத் , வீடியோ
3/25/2013
நம் போட்டோ பேனர்களில் வேண்டுமா ?
நம்ம எல்லாருக்கும் தங்களுடைய ஃபோட்டோக்களை அழகு படுத்தி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றவே இந்தத் தளம் .
இத்தளத்தில் உருவாக்கப்பட்ட படத்தைத் தான் இங்கு காண்கிறீர்கள்.
முதலில் உங்களுடைய போட்டோவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து தளத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்குப் பிடித்தமான ஃபோட்டோ ஃப்ரேமைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து Choose File க்ளிக் செய்யுங்கள், கிடைக்கும் Browse பகுதியைக் க்ளிக் செய்து உங்கள் போட்டோவை இணையுங்கள்.
இப்போது உங்கள் போட்டோ சுடச் சுட ரெடியாகிவிட்டது. அதை உங்களுக்குப் பிடித்த ஃபோல்டரில் பதிவு செய்து கொள்ளுங்கள். இனி நீங்கள் எந்த வெப்சைட்டிலும் இப்படத்தை இணைத்து கருத்துக்களை வாங்கலாம்…
உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?
உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?
-------------------------------------------------------------------------
“இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கானகாரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா சிறையிலிருக்கும் பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்”. – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69 வயதில் இதைக் கூறிய அவர்கள், அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராக திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடியவர்கள்.

3/24/2013
3/23/2013
Skype இல் தோன்றும் விளம்பரங்களை நிறுத்த வேண்டுமா?
உலகில் அதிகளவாக பயன்படுத்தப்பட்டுவரும் இலவச வீடியோ அழைப்பு சேவையான Skype-ல் விளம்பரங்களை தோற்றுவிக்கும் வசதி அண்மைக்காலத்தில் இச்சேவையை வழங்கும் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதனால் கணினிகளில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினூடாக அவ் விளம்பரங்கள்... தொடர்ச்சியாக தோன்றிய வண்ணமே இருக்கும். இவ்வாறு தோன்றும் விளம்பரங்களை நிறுத்த வேண்டுமெனின் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்கும் Skype மென்பொருளினை இயக்கி அதில் காணப்படும் Tools-Options மெனுவிற்கு சென்று Privacyஎன்பதை கிளிக் செய்யவும். தொடர்ந்து தோன்றும் பக்கத்தில் Allow Microsoft Target ads என்பதற்கு நேரே காணப்படும் சரி அடையாளத்தை நீக்கிவிடவும்.
3/20/2013
Facebook: வேண்டாதவர்களை Block செய்ய
Facebook சமூக இணைத்தில் பல நண்பர்களை நாம் இணைத்திருப்போம். சில சமயங்களில், நம்க்கு வேண்டாத, நாம் விரும்பாத ஒரு சிலரை நமது Facebook கணக்கிலிருந்து நீக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். முதலில் Facebook தளத்தில் உங்கள் பயனர் கணக்கில் ழையுங்கள். பிறகு வலது மேற்புறமுள்ள Accounts லிஸ்ட் பாக்ஸை க்ளிக் செய்து, Privacy Settings பகுதிக்கு செல்லுங்கள். அடுத்து திறக்கும் privacy settings பக்கத்தில் கீழே உள்ள, சிவப்பு நிற ஐகானை கொண்டுள்ள, Block Lists பகுதியில் Edit your lists லிங்கை க்ளிக் செய்யுங்கள். அடுத்து திறக்கும் திரையில், நாம் இரண்டு வழிகளில் ஒருவரை Block செய்திட முடியும். முதலாவது, அந்த நபரின் பெயரை Block Users பகுதியில் உள்ள Name என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் தட்டச்சு செய்து, Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும், (ஒரே பெயரில் பலர் இருக்கும் பட்சத்தில், அந்த குறிப்பிட்ட பெயரைக் கொண்ட அனைவரது விவரங்களும் பட்டியலிடப்படும், அவற்றில் நமக்கு வேண்டாதவரை தேர்வு செய்து கொள்ளலாம்.) இரண்டாவது, அந்த நபரின் மின்னஞ்சல் முகவரியை Email என்பதற்கு நேராக உள்ள பெட்டியில் கொடுத்து Block this User பொத்தானை க்ளிக் செய்வதன் மூலமாகவும் Block செய்திடலாம்.
3/17/2013
Facebookல் Video Calling செய்வது எப்படி
Facebookல் Video Calling செய்வது எப்படி என்று பார்ப்போம் பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கு வீடியோ சாட்டிங்க் செய்யும் வசதியை தந்துள்ளது இதை எவ்வாறு செயற்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம். 1. முதலில் பேஸ்புக்கில் லாகின் செய்தபின்னர் கீழுள்ள இணைப்புக்குச் சென்று Get Started என்பதை கிளிக் செய்யுங்கள் https://www.facebook.com/videocalling 2. கணினியில் பேஸ்புக்கினால் தரப்படும் புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து நிறுவ வேண்டும். 3. நிறுவி முடித்ததும் வழமையான சாட் விண்டோவில் புதிதாக தோன்றும் கமெரா ஐகானை கிளிக் செய்யுங்கள். ( Flash ஐ செயற்படுத்த அனுமதிக்க வேண்டும்.) 4.Camara ஐகானை கிளிக் செய்து வீடியோ சாட்டை ஆரம்பித்தால் மறுமுனையில் இருப்பவர் பதிலளிக்கும் வரை வீடியோ தெரியாது. 5.இனி பேஸ்புக்கில் இருந்தபடியே நண்பர்களுடன் வீடியோ சாட்டிங் செய்து மகிழலாம்.
1/26/2013
விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு
விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு
அதிகளவான கணினிப் பாவனையாளர்களால் விண்டோஸ் இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் அன்றாடம் இவ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மென்பொருட்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணினிகளின் செயற்பாட்டு வேகத்தினை மந்தமையாது பாதுகாப்பதுடன், வேகம் குறைந்த கணினிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு என Avira System SpeedUp எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வகையான விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படவல்ல இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தின பின்னணியில் செயற்பட்டு கோளாறுகளை சுட்டிக்காட்டுவதுடன் தானாகவே சரிசெய்யக்கூடியதாக காணப்பகின்றது, அத்துடன் தேவையற்ற கோப்புக்கள், குக்கீஸ் போன்றவற்றினையும் நீக்குகின்றது.
இவை தவிர File Encryption, Startup Manager, Smart Defragmenter, Disk Analyzer, Uninstaller போன்ற வசதிகளையும் இம்மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.
1/07/2013
VLC media Player - நமக்கு தெரியாத சிறப்பம்சங்கள்

VLC Player மென்பொருள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோக்களை காண்போம். இது மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளும் இதில் அடங்கி உள்ளது.
Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி?
- அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம்.
- VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.
- சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை Play செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம்.
- Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம்.
- நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும்.
- Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
- வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து, செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது) படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும்.
- இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.
1/05/2013
கம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்
கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வருகிறது. எத்தகைய அலுவலகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர்வாகம் இயக்கப் படுகிறது. அதே போல தனி நபர் வாழ்க்கையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது.
மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதனாலேயே கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், அதனைத் தீர்ப்பதற்கு அதற்குரிய டெக்னீஷியனை நாடாமல் நாமே ஓரளவில் தீர்த்துக் கொள்ள முயல்கிறோம். இதற்குக் காரணம் பெரும்பாலான பிரச்னைகள், நாமே தீர்த்துக் கொள்ளும் அளவிலேயே இருக்கும். எனவே நம்மிடம் கம்ப்யூட்டரில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம்கள் எப்போதும் இருப்பது நல்லது. இவற்றை ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்துக் கொண்டால், நமக்கும் நம் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். அத்தகைய புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புரோகிராம்கள் அனைத்தும், ஒரு பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் புரோகிராம்களே.
1. சூப்பர் ஆண்ட்டி ஸ்பைவேர் போர்ட்டபிள் ஸ்கேனர் (Super Anti Spyware Portable Scanner): உங்கள் பிளாஷ் ட்ரைவில் இது கட்டாயம் இடம் பெற வேண்டும். அத்துடன் இதன் அப்டேட் பதிப்புக்கு அடிக்கடி இதனை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அடிக்கடி இதற்கான அப்டேட் பைல் வெளியிடப்படுகிறது. வைரஸ் மற்றும் மால்வேர் பாதிப்பில்லாத கம்ப்யூட்டர் ஒன்றில் டவுண்லோட் செய்து, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றி வைத்துப் பயன்படுத்தலாம். பிரச்னைக்குள்ளான கம்ப்யூட்டரை சேப் மோடில் (safe mode) இயக்கிப் பின்னர் இதனைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரைக் காப்பாற்றலாம். இந்த புரோகிராமை http://www .superantispyware.com/portablescanner.html என்ற முகவரியிலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
2. ஹைஜாக் திஸ் (Hijack this): இது ஒரு ஸ்கேனர் அல்ல. போர்ட்டபிள் விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் ஒரு அலசும் டூல். பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுக்கும். அந்த ரிப்போர்ட்டிலிருந்து, கம்ப்யூட்டரைப் பாதிக்கும் வகையில் மால்வேர் இருந்தால் அறிந்து கொள்ளலாம். பின்னர் தெரிந்து கொண்ட மால்வேரை எப்படிக் கையாள்வது என்று அறிய, http://hjtdata.trendmicro.com /hjt/analyzethis/index.php என்ற முகவரி சென்று தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம்.
3. ஏ.வி.ஜி. ரெஸ்க்யூ சி.டி. (AVG Rescue CD): விண்டோஸ் இயக்கத்தில் மால்வேர் மற்றும் வைரஸ் அறியும் ஸ்கேனர் புரோகிராமை இயக்க முடியவில்லையா? இந்த புரோகிராம் பயன்படும். இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும். சி.டி.யில் வைத்து இயக்கவும், ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கவும் தனித்தனியே இந்த பைல் தரப்படுகிறது. பெற்று பயன்படுத்தலாம். பெற்றுக் கொள்ளhttp://www.avg.com/usen/avgrescuecddownload.tplmcr8 என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.
மால்வேர் அல்லது வைரஸ் பாதிப்பு மட்டுமே பிரச்னையாகாது. மேலும் பலவகை பிரச்னைகள், பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படும். பைல்கள் அழிக்கப்பட்டு கிடைக்காத நிலை ஏற்படலாம். ரெஜிஸ்ட்ரியில் தேவையற்ற குறியீடுகள் குவிந்து பிரச்னை ஏற்படுத்தலாம். சாப்ட்வேர் ஒன்றை நீக்குகையில், அனைத்து பைல்களும் அழியாமல் இருக்கலாம். இவற்றிற்கான சில போர்ட்டபிள் புரோகிராம்களை வைத்து இருப்பதுவும் நமக்கு முதலுதவி பெட்டி போல பயன்படும். அதற்கான புரோகிராம்கள் இதோ:
1.ரெகுவா போர்ட்டபிள் (Recuva Portable): அழிக்கப்பட்ட ஒரு பைலை மீண்டும் பெற நமக்குக் கிடைக்கும் புரோகிராம்களில், மிகச் சிறந்த புரோகிராம் இதுவாகும். பிரிபார்ம் நிறுவனம் இதனைத் தயாரித்து அளிக்கிறது. இதுவும் இலவசமே. இதனைப் பெற http://www.piriform.com/recuva/features/portableversion என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. சிகிளீனர் போர்ட்டபிள் (CCleaner Portable): பிரிபார்ம் நிறுவனம் தரும் இலவச புரோகிராம்களில் மிகவும் பிரபலமான, பயனுள்ள புரோகிராம் இதுதான். கம்ப்யூட்டரில் தங்கியுள்ள வேண்டத்தகாத பைல்கள் அனைத்தையும் நீக்கிக் கம்ப்யூட்டரைச் சுத்தப்படுத்தும் புரோகிராம் இது. ரெஜிஸ்ட்ரியையும் இது சுத்தப்படுத்தும். (இந்த வேலைக்கு மிக கவனம் தேவை). புரோகிராம்களை இதன் மூலம் முழுமையாக நீக்கலாம். எதற்கும் அடுத்த புரோகிராம் குறித்தும் அறிந்து கொள்ளவும். போர்ட்டபிள் சிகிளீனர் புரோகிராமினை இலவசமாகப் பெற http://ccleanerportable.en.softonic.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
3. ரெவோ அன்இன்ஸ்டாலர் போர்ட்டபிள் (Revo Uninstaller Portable): விண்டோஸ் புரோகிராம் ஒவ்வொன்றும், அதனைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும் அன் இன்ஸ்டாலர் புரோகிராமுடன் இணைத்தே தரப்படுகிறது. விண்டோஸ் இயக்கமும் தன்னிடத்தே ‘Programs and Features’ மற்றும் ‘Add or Remove Programs’ போன்ற புரோகிராம்களை இந்த வேலைக்குப் பயன்படுத்தும் வகையில் கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய புரோகிராம்கள், பல பைல்களைக் குப்பையாகக் கம்ப்யூட்டரி லேயே தங்க விடுகின்றன. ஒரு சாப்ட்வேர் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்க வேண்டுமானால், ரெவோ அன் இன்ஸ்டாலர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். ரெவோ இந்த வகையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. http://www.revouninstaller. com/revo_uninstaller_ free_download.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனைப் பெறலாம்.
4. எச்.டி. ட்யூன் (HD Tune): இது தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு போர்ட்டபிள் புரோகிராம் அல்ல. ஆனால் இதனை விண்டோஸ் இயக்கத்தில் இன்ஸ்டால் செய்து, அப்படியே அதன் போல்டரை, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றிப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஹார்ட் டிஸ்க், அதன் பைல் விபரங்கள் குறித்த பல்வேறு தகவல்களைத் தந்து, சிக்கல்களைத் தீர்க்க உதவிடும். http://www.hdtune.com/download. html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.
மேற்கண்ட புரோகிராம்களை, ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்திருப்பது நமக்கு பாதுகாப்பு. இவை எல்லாம் உங்களிடம் இருக்கிறது என்பது, நண்பர்கள் மத்தியில் ஒரு ஸ்டேட்டஸை அளித்திடும்.

1/04/2013
கணினியில் வைரஸ் உள்ளதா என்பதை எளியமுறையில் கண்டறிய(COMPUTER TIPS)
நமது கணினியில் வைரஸ் ஏதேனும் உள்ளதா என்பதை எவ்வாறு நாம் கண்டறிவது? இதற்கு பல ஆண்டி வைரஸ்கள் இருந்தாலும் இதனை நாமே எளிய முறையில் கண்டுபிடிக்க முடியும். அது எவ்வாறு என்பதை இப்பொழுது பார்ப்போம்.
இதற்கு நாம் முதலில் START --> RUN திறந்துகொண்டு அந்த RUN பெட்டியில் system.ini என்ற வார்த்தையினை தரவேண்டும். தந்த உடன் Notepad மூலமாக ஒரு செய்தி திரை கீழ் உள்ளது போன்று தோன்றும்.
படத்தில் உள்ளது போன்று உங்கள் திரையில் தோன்றினால் உங்களது
கணினியில் வைரஸ் ஏதும் இல்லை என்பதாகும். அதற்கு மாறாக கீழே படத்தில் உள்ளது போன்று சிகப்பு நிறத்துடன் கூடிய நட்சத்திர குறி தோன்றினால் வைரஸ் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.
வைரஸ் உள்ளது என்பதை இந்த சிகப்பு நிறக்குறி தெரியப்படுத்துகின்றது. எனவே நல்ல ஆண்டி வைரஸ் மூலம் அதனை நீக்க வேண்டும். இவ்வாறாக நாமே இந்த எளிய முறையின் மூலம் நமது கணினியில் வைரஸ் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

1/02/2013
செல்பேசியில் தமிழைக் கொண்டு வர
செல்பேசியில் தமிழைக் கொண்டு வர உங்கள் செல்பேசியில் ஒரு சிறிய மாற்றத்தை செய்தாலே போதுமானது.
இன்று இருக்கும் தொழில்நுட்ப உலகத்தில் இதெல்லாம் ஒரு சாதாரண வேலைதான். இன்னும் உங்கள் செல்பேசிகளில் நீங்கள் தமிழைப் படிக்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா?
தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் கட்டகட்டமாகவே காட்சியளிக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் இன்னும் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது உங்கள் மொபைல் பிரௌசரில் மாற்றத்தைக்கொண்டு வரவில்லை என அர்த்தம்.
சற்றும் தாமதிக்காமல் இந்த மாற்றத்தை உங்கள் மொபைலில் செய்துவிடுங்கள்..
தற்போதுள்ள எல்லா தமிழ்வலைப்பக்கங்களுமே Unicode தமிழில் எழுதப்பட்டதுதான். எனவே நீங்கள் எந்த மொபைலைப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் அதில் தமிழ்வலைப்பக்கங்களை எளிதாக காண முடியும்.
அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் Opera Mini Browser பயன்படுத்தியிருந்தாலே போதுமானது. உங்கள் Opera Mini Browser-ஐப் பயன்படுத்தி வலைத்தளங்களை முழுமையாக பார்வையிட முடியும். எழுத்துகளும் சிதையாமல் சிறந்த முறையில் காட்சி அளிக்கும்.
மாற்றத்தை எப்படி செய்வது?
உங்கள் செல்பேசியில் Opera Mini Browser நிறுவியிருக்க வேண்டும். Opera Mini Browser இல்லாதவர்கள் இந்த முகவரியில் http://www.opera.com சென்று Opera Mini Browser -ஐத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் உங்கள் பிரவுசரில் ஏதாவது ஒரு தமிழ் வலைத்தளத்தை திறந்து பார்த்தீர்களானால் இப்படித்தான் காட்சி அளிக்கும்.
இவ்வாறு காட்சியளிப்பதை தவிர்க்க உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பாரில் about:config என தட்டச்சிட்டு Enter தட்டவும்.
உடனே புதிதாக ஒரு மெனு தோன்றும். அந்த Power user setting-ல் Use bitmap fonts for complex scripts என்பதில் yes என்பதை தேர்ந்தெடுங்கள்.
இப்போது கீழிருக்கும் Save என்பதை கிளிக் செய்து மாற்றத்தை சேமித்துவிடுங்கள்.
இப்போது உங்கள் மொபைலிலும் தமிழ் வலைப்பக்கங்கள் முழுமையாக தமிழில் படிப்பதற்கு ஏற்றவாறு காட்சியளிக்கும்.
நன்றி நண்பர்களே..!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

.jpg)

.jpg)
.jpg)