12/31/2012

மெதுவான இணைய இணைப்பிலும் இணையத்தில் வேகமாக உலாவ




 நாம் அனைவரும் இணையத்தில் வேகமாக உலாவுவதை தான் மிகவும் விரும்புகிறோம் . அனைவரும் அவரது சமூக வாழ்கையிலும் மற்றும் நடைமுறை வாழ்கையிலும் இணைவதற்கு இணையம் இன்றியமையாததாக மாறிவிட்டது.அதனால் அனைவருக்கும் வேகமான இணைப்பு வேண்டும் என்று தான் ஆசை படுகின்றனர்.இப்போது பல தொலைபேசி நிறுவனங்களும் பல வகையான இணைய இணைப்பை தருகின்றனர்.இப்பொழுது பல நிறுவனங்களும் இணைய இணைப்பை வேகமாக்குவதர்க்கு பணியாற்றிக் கொண்டு இருக்கின்றனர். எனவே இன்று நாம் நீங்கள் ஒரு மெதுவான இணைப்பில் இணையத்தை வேகமாக அணுகுவது எப்படி என்பதை பற்றி பேசுவோம்.



                                                   

இணையத்தை வேகமாக அணுக இரண்டு வழிகள் 

1.கூகிள் ஸ்லைசர் : 

இந்த கூகிள் ஸ்லைசர் என்ன செய்கிறது என்றால் உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள படங்களை தவிர்க்கிறது ( நீங்கள் விருப்ப பட்டால் )அதனால்உங்கள் வலைப்பக்கம் இலகுவாக மாறுகிறது இதனால் நீங்கள் விரைவாக அந்த பக்கத்தை பார்வையிடலாம்.








                                           தளத்திற்கு செல்ல : சுட்டி




2.TCP Optimizer :

TCP Optimizer ஒரு இலவச மென்பொருள் இது விண்டோஸ் இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டது இது உங்கள் கணினியின் இணைய இனைப்பை வேகமாக்கும்.இதை பதிவிறக்கி அதை ரன் செய்யவும்.அதற்க்கு முன்னர் உங்கள் இணைய உலாவிகளை மூடிக் கொள்ளவும்.


                              இதை பதிவிறக்க : TCP OPTIMIZER



இதை பதிவிறக்கிக் கொள்ளுங்கள் பின்னர் நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விஸ்டா பயன்படுத்துபவராக இருந்தால் அதை வலது கிளிக் செய்து "RUN AS ADMINISTRATOR" என்பதை தேர்வு செய்யுங்கள் மற்ற இயங்குதளத்தில் நீங்கள் டபுள் கிளிக் செய்யுங்கள் பின்னர் கீழே உள்ளதை போல தோன்றும்.





அதில் உங்கள் பரோட் பேண்ட் கணக்கின் வேகத்தை(512KBPS,1MBPS,ETC) குறிப்பிடுங்கள் பின்னர் அதில் MODIFY ALL NETWORK ADAPTERS என்பதை தேர்வு செய்யுங்கள் பின்னர் கீழே OPTIMAL என்பதையும் கிளிக் செய்து விட்டு APPLY CHANGES என்ற பொத்தானை அழுத்தவும்.பின்னர் வரும் விண்டோவில் OK வை அழுத்தவும்.

உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளுங்கள் . பின்னர் WWW.SPEEDTEST.NET   என்ற வலைப்பக்கத்திற்கு சென்று உங்கள் இணையத்தின் வேகத்தை சோதித்து பாருங்கள் . TCP OPTIMIZER-ரை பயன்படுத்தும் முன்னும் உங்கள் இணைய வேகத்தை சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.

12/29/2012

இணைய வேகம் குறைகிறதா?


இணைய வேகம் குறைகிறதா? super anti spyware கொண்டு இணையவேகத்தை அதிகப்படுத்த


 உங்கள் இணைய வேகம் குறைகிறதா? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும்.. பெரும்பாலான காரணம் இதுவாகத்தான் இருக்கும். 

அதாவது இணையத்திலிருந்து கணினியைத் தாக்கும் வைரஸ் போன்றவைகளால் இணையத்தில் வேகம் பெருமளவு குறைந்துபோகும். 

மற்றொரு முக்கிய காரணம், ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மால் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் மென்பொருள்கள்(softwares), படங்கள்(Images), மற்றும் பலதரப்பட்ட கோப்புகள் ஆகியவைகளே காரணமாக இருக்கும். இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு முறைமட்டுமே பயன்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தாமலேயே இருக்கும் எத்தனையோ மென்பொருள்கள்(softwares), கோப்புகள்(documents), படங்கள்(images), வீடியோக்கள்(videos) போன்றவைகளை நாம் கணினியிலிருந்து நீக்காமலே வைத்திருப்போம். 

மேலும் நம் கணினியில் உள்ள Registry, Memory, Cookies போன்றவற்றுக்குள் Malware, Trojan Horse,Trojan.Agent,Adware Tracking Cookies,Application Agent போன்ற வைரஸ்கள் இறங்கி தன்னுடைய வேலையைக் காட்டிக்கொண்டிருப்பதனாலேயே உங்கள் கணினி, மற்றும் இணைய வேகம் வெகுவாக குறைந்து காணப்படும்.

இவற்றுக்கெல்லாம் ஒரு ஒரு மென்பொருளைக்கொண்டே தீர்வு காணலாம். இம்மென்பொருளானது சாதாரணமாக நமது கணினியில் இருக்கும் Antivirus, Internet Security, Anti-virus Scanner போன்ற மென்பொருட்களால் தீர்க்கப்படாத பிரச்னைகளையும், வைரஸ்களையும் கூட நீக்கி கணினி மற்றும் இணையவேகம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. 

மென்பொருளின் பெயர்: SUPERAntiSpyware Pro 4.53.1000
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி

மக்கா ஹரம் ஷரிப் தளம் விரிவாக்கம்


மக்கா ஹரம் ஷரிப் தளம் விரிவாக்கம் Makkah Haram Mataaf extension


காபாவில் கழற்றி மாட்டக்கூடிய வகையில் அமையவிருக்கும் புதிய பாலம். 

12/18/2012

குரோம் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு உதவும் நீட்சி


Chrome History Eraser App: குரோம் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு உதவும் நீட்சி

chrome_eraser_001 (1)
இணையத்தளப் பாவனையின் போது முக்கிய பங்கு வகிக்கும் உலாவிகளில் முதன்மையானதாக விளங்கும் கூகுள் குரோம் ஆகும்.
இங்கு சேமிக்கப்படும் தற்காலிக கோப்புக்களின் காரணமாக அதன் உலாவல் வேகம் மந்தமடைந்து செல்லும். இதனால் அக்கோப்புக்களை அகற்றிவிடுவது அவசியமானதாகும்.
இதற்கான வசதி குரோம் உலாவியில் தரப்பட்டுள்ள போதிலும் இச்செயற்பாட்டை மேலும் இலகுவாக்கும் பொருட்டு நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Chrome History Eraser App எனும் இந்த நீட்சியின் உதவியுடன் Cache, Cookies, Download History, தட்டச்சு செய்யப்பட்ட URL-கள், மற்றும் Browsing History என்பவற்றை ஒரே கிளிக் மூலம் அகற்றி விட முடியும்.
இவை தவிர சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களையும் அகற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

12/17/2012

உங்கள் கணினி அடிக்கடி உறைந்து போய்விடுகிறதா? எளிய தீர்வு..!



அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு நண்பர்களே ...

உங்கள் கணினி அடிக்கடி அப்படியே ஸ்ட்ரக்ட் ஆகி உறைந்து நின்றுபோகிறதா? பின்னணியில் ஏதேனும் பிழைச் செய்தியை காண்பித்து அப்படியே உறைந்து அப்படியே உங்களையே வெறித்துப் பார்க்கிறதா? 

இதுபோன்ற பிரச்னைகள் சாதாரணமாக அனைத்து கணினிகளிலுமே ஏற்படக்கூடியதுதான். அதற்காக என்னவோ ஏதோவென்று பயப்பட வேண்டாம். அதாவது நீங்கள் உபயோகித்துக்கொண்டிருக்கும் applications களில் ஏதேனும் ஒன்று வேலை செய்யாமல் நின்றுவிட்டது என்றுதான் அதற்கு பொருள். அதிக பணிச்சுமை காரணமாகவோ, அதிகமான அப்ளிகேஷன்களை கணினியில் திறந்து வைத்திருந்தாலோ இதுபோன்ற நிகழ்வுகள் உங்கள் கணினியில் ஏற்படும். 


கணினி உறைதலை எப்படி உணர்ந்துகொள்வது? 

கணினியில் பணிசெய்துகொண்டிருக்கும்போது அந்த அப்ளிகேஷனை minimize செய்யவோ, maximize செய்யவோ முடியாது. எத்தனை தடவை நாம் முயற்சித்தாலும், மினிமைஸ் செய்யவோ, மேக்சிமைஸ் செய்யவோ முடியாது. அந்த விண்டோ அப்படியே திரையில் காட்சிக்குத் தெரியுமே தவிர நாம் மௌஸ் துணையுடன் அவற்றை சிறியது செய்யவே, பெரியதாக மாற்றவோ முடியாது. இவ்வாறு ஒரு application செயல்படாமல் அப்படியே நின்றுபோவது கணினி உறைந்துவிட்டது என்பதை அறிந்துகொள்வதற்கான ஒருவகை அறிகுறி. 

அதைப்போலவே மற்றுமொரு வகையான அறிகுறி என்னவெனில், அப்ளிகேஷன் விண்டோக்களை மினிமைஸ் செய்தால் எப்படி சிறியதாக காட்சித்திரை கீழிறங்குமோ... அதைப்போன்று தொடர்ச்சியாக விண்டோக்கள் மினிமைஸ் செய்வதைப்போன்ற தோற்றம் வந்துக்கொண்டே இருக்கும். இதுவும் கணினி உறைந்துவிட்டதைக் குறிப்பதற்கான ஒருவகையான அறிகுறியாகும். 

மற்றுமொரு முக்கியமான அறிகுறி.. Mouse pointer எங்கும் நகராமல் அப்படியே ஸ்தம்பித்து ஒரே இடத்திலேயே நிற்பது..அவ்வாறு மௌஸ் பாய்ண்டர் நகராமல் இருந்தாலும் கணினி ஸ்டரக் ஆகி நின்றுவிட்டது என்று அறிந்துகொள்ளலாம். 


மற்றுமொரு அறிகுறி not respond என்னும் பிழைச்செய்தியைக் காட்டும். சில நேரங்களில் this program performed an illegal operation will be shutdown என்ற எச்சரிக்கை செய்தியும் காட்டப்படும். 

இவ்வாறு ஏதேனும் ஒரு வகையில் நமக்கு கணினியானது உறைந்துவிட்டது என்பதை கணினி அறிவிக்கும். அப்பொழுது இந்த புரோகிராமை நிறுத்திவிடுமாறு பணிக்கும். அல்லது Cancel செய்துவிடுங்கள் என்ற செய்தியைக் காட்டும். அவ்வாறு கேன்சல் செய்த பிறகு தானாகவே மீண்டும் அந்த அப்ளிகேஷன் திரும்ப இயங்கும் வகையில் செயலாற்றும். 


ப்ளூ ஸ்கீரீன் டெத் (blue screen death) என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியும் ஒரு அறிகுறியாகும். அச்சூழ்நிலையில் வெண்மை நிறத்தில் பிழைச் செய்திகளைக் காட்டும். இவ்வாறு தோன்றும் நிலையை கிராஸ்(crash) ஆகிவிட்டது என்பர்.


கணினி Crash ஆவதற்கு காரணம் என்ன? 


முக்கியமாக கணினி நினைவகத்தில் ஏற்படும் அதிக பணிச்சுமையை குறிப்பிடலாம். 


அடுத்து வன்பொருட்கள் ஒன்றுடன் ஒத்திசைந்து இயங்காத நிலையில் இவ்வாறான நிலை ஏற்படும். 


இயங்குதளம் (operating system), அப்ளிகேஷன்ஸ் சாப்ட்வேர்ஸ் (application softwares), Driver softwares ஆகிய மென்பொருள்களில் ஏற்படும் பிரச்னைகள் காரணமாகவும் இவ்வாறான கணினி உறைதல் நடைபெறும். 


கணினி நன்றாக செயல்பட வேண்டுமாயின், நிச்சயமாக கணினியில் இடம்பெற்றுள்ள மென்பொருள்களுக்குத் தகுந்த நினைவகம் (RAM-Random access Memory) வேண்டும். இந்த நினைவகம் ஏற்றுச் செய்யும் அளவைவிட அதிக மென்பொருள்களைப் பயன்படுத்தும்போது தற்காலிகமாக இவ்வாறான கணினி உறைநிலை ஏற்படும். இது தவிர்க்க இயலாத ஒன்று. 


அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் இயக்க முற்படும்பொழுது அதிகமான பணிச்சுமையின் காரணமாக கணினி உறைந்துவிடும். 


கணினி உறைதலுக்கு வேறு சில காரணங்கள்: 


கணினியில் நாம் பயன்படுத்தும் வெவ்வேறுவிதமான அப்ளிகேஷன்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகள் காரணமாகவும்.  (இயங்கிகொண்டிருக்கும் அப்ளிகேஷன்கள் conflict ஆவதாலும்) கணினி உறைதல் ஏற்படுகிறது. 


Antivirus மென்பொருள்கள் மற்ற அப்ளிகேசன்களுடன் சில சமயம் ஒத்துப்போகாமல் இவ்வாறான conflict ஏற்படும்.



கணினி உறைதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? 


கணினியை Reboot செய்யலாம்.. அவ்வாறு ரீபூட் செய்யும்பொழுது பிரச்னை எதுவும் இல்லையென்றில் கண்டிப்பாக ரெஜிஸ்ட்ரியில் ஏதேனும் பிரச்னை இருக்கும். 


அவ்வாறு ரெஜிஸ்ட்டிரில் பிரச்னை என்றால், உங்கள் கணினியை Safe மோடில் இயக்கவிட்டு, நல்லதொரு Registry cleaner மென்பொருள் கொண்டு Registry கிளீன் செய்து, கணினியை பழைநிலைக்கு கொண்டு வரலாம். 


கணினியை Safmode-ல் இயங்க வைப்பது எப்படி? 


இது ஒன்றும் பிரமாதமான விஷயம் இல்லை.. உங்கள் கணினியை Restart கொடுக்கும்பொழுது F8 கீயை அழுத்தி, கணினி எந்த முறையில் தொடங்க வேண்டும் என்னும் மெனுவைப் பெறலாம். அதில் Safe Mode தேர்ந்தெடுத்து enter செய்வதன் மூலம் Safe mode-ல் கணினியை துவக்கலாம். 


ரெஜிஸ்ட்ரி பைல்கள் இடம் மாறினால் கூட கணினி இவ்வாறான உறைநிலைக்கு போக வாய்ப்பிருக்கிறது. 

Registry பைல்கள் என்றால் என்ன? 


Registry பைல்கள் என்பது கணினியில் இருக்கும் Registry எனும் அமைப்பில் இருக்கும் கோப்புகளாகும். இந்த Registry உள்ள கோப்புகள் ஒவ்வொன்றும் கணினியில் உள்ள ஒவ்வொரு அப்ளிகேஷனுக்குரிய கட்டளைகளை கொண்டிருக்கும். அந்த கட்டளைகளின் மூலமே கணினியில் அடுத்தடுத்த செயல்கள் நடைபெறும். அவ்வாறான அடுத்த அடுத்த செயல்பாடுகளை செய்யும் கட்டளை நிரல்வரிகளை உள்ளடக்கியிருப்பது இந்த ரெஜிஸ்ட்ரி பைல்களே..!


இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த Registry Fileகள் இடம்மாறும்பொழுது கணினியில் முறையான செயல்பாடு நடைபெறாது. அவ்வாறு செயல்பட எந்தெந்த கட்டளைகள் எங்கெங்கு உள்ளன என்பதை தேடிப்பெற கணினிக்கு அதிக சிரமம் ஏற்படும். இவ்வாறு தான் தேடும் கட்டளைக்குரிய கோப்புகள் கிடைக்காதபொழுது கணினி தானாகவே உறைந்துவிடும். 


தீர்வு: 


அப்ளிகேஷன்கள் இயங்காது அப்படியே உறைந்துவிடும்பொழுது Task Manager-ஐப் பயன்படுத்தி அந்த அப்ளிகேஷன்களின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வரலாம். அதாவது Ctrl+Alt+ Delete பட்டன்களை ஒருசேர அழுத்தி தோன்றும் விண்டோவில் எந்த அப்ளிகேஷன் செயல்படாமல் உள்ளதோ அந்த அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்து End Task கொடுப்பதன் மூலம் அந்த அப்ளிகேஷனின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வரமுடியும். 


அவ்வாறு செய்தும் அந்த அப்ளிகேஷனின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போகும்பொழுது மீண்டும் ஒருமுறை   Ctrl+Alt+ Delete அழுத்த கணினி ரீபூட்(Reboot)ஆகிவிடும். 


அப்படி செய்தும் ரீபூட் ஆகவில்லை எனில் இறுதியாக இந்த வழியை நீங்கள் கடைப்பிடிக்கலாம். அதாவது Reset பட்டன் ஒன்று சிறியதாக இருக்கும் அல்லவா? அந்த பட்டனை அழுத்தி மீண்டும் புதியதாக கணினியை மறுதொடக்கம் செய்யலாம். அவ்வாறு செய்தும் மறுதொடக்கம் ஆகவில்லை என்றால் கணினியில் மெயின் பவர் பட்டனை ஐந்து வினாடிகள் தொடர்ச்சியாக அழுத்திக்கொண்டே இருந்தால் கணினி தானாக தன்னை முடக்கிக்கொள்ளும். 


பிறகு மீண்டும் கணினியை Start செய்து பயன்படுத்தலாம். 


மிக்க நன்றி நண்பர்களே..!

12/13/2012



Post image for அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?
அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான். 

    மனிதனுடைய இன்றைய வாழ்வின் முழு நோக்கம் காசு, பணங்கள் மட்டும்தான் உலக வாழ்க்கைக்கு முக்கிய அடிப்படை அஸ்திவாரம் என்ற தவறான ஒரு மனக்கணக்கு. இதன் கேட்டை உணராமல் இதற்காக உண்ணாமலும், உறங்காமலும் தினந்தோறும் மனிதனுடைய வாழ்வில் பெரும் போராட்டங்கள் உத்தரவாதமில்லாத தன் உயிரின் இரகசியத்தை எண்ணிப் பார்க்கக்கூட நேரமில்லாத மனித இனம்; படைத்தவன் பறிக்க நாடினால் தடுக்க வழியில்லாத உயிரின் இரகசியம் படைத்தவனுக்கே வெளிச்சம். அவனையும் மறந்து உலக வாழ்வின் ஆடம்பரத்தில் சிக்கி நிராகரிப்பின் பாதையில் தோல்வி நடைபோடும் மனித இனம். இத்தகைய நிராகரிபோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கைதான் கீழ்கண்ட அல்குர்ஆன் வசனங்கள்.
    அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்? அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல அவர்கள் (இதை) உணர்வதில்லை.[23:55,56]  
    இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? [26:129]  
    ‘‘நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! [4:78]  
    மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள் ”எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று. இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் [8:50,51]   
    உடலில் உலவிக் கொண்டிருக்கும் ஆவி அடங்கிப்போனால் எத்தனைப் புகழோடும் வாழ்ந்தவனாகினும், கற்றறிந்த மேதையாகினும், நிபுணனாகினும், கோடிக்கணக்கான செல்வங்களுக்கு அதிபதியாகினும், அல்லது சந்ததிகளை அதிகமாக அடைந்தவனாகினும் அவன் உயிரை மலக்குகள் கைப்பற்றிச் செல்லும்போது அவனது புகழோ, மேதையோ, நிபுணத்துவமோ செல்வங்களோ, சந்ததிகளோ எந்தப்பயனும் அளிக்காது. அவன் உயிரை மீட்டுத்தரவும் முடியாது.
    அவனுடைய உடலை மூட வேண்டுமானால் கஃபன் துணி தயாராக இருக்கும். தூக்கிச் செல்ல நாற்சக்கர வண்டியோ அல்லது யாரோ நால்வர் தூக்கிச் சென்று புதைகுழியில் வைக்கத் தயாராய் இருப்பார்கள். உள்ளே வைத்தவுடம் அனைவரும் விலகி விடுவர். அங்கு மலக்குகள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல அவன் மட்டுமே தகுதியானவனாக இருப்பான். இறைக்கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்த உண்மை முஸ்லிம் தக்க பதிலைக்கூறி புது மாப்பிள்ளையைப்போல கியாமநாள் வரை நித்திரையில் மூழ்கியிருப்பான். இறைக்கட்டளைகளை நிராகரித்து வாழ்ந்தவனோ பதிலளிக்க முடியாதவனாக கபுரின் அதாபில் (கல்லறை வேதனை) மூழ்கி துன்பத்தை அனுபவிப்பான்.
    அதனால்தான் நபி(ஸல்) இரண்டு வஸ்துக்களுக்கு இந்த உம்மத்தார்மீது அதிகமாக பயந்தார்கள். “இச்சைக்கு வழிபடுவதும் நெடுநாள் உயிர்த்திருப்பதிலும் ஆதரவு வைப்பதுமான இந்த இரண்டு குணங்களைப் பற்றி நான் பயப்படுவதுபோல் வேறு எந்த வஸ்துவைப் பற்றியும் உங்கள் மீது நான் அவ்வளவாக பயப்படுவதில்லை” என்று கூறினார்கள்.
    நபி(ஸல்) அவர்களின் கூற்று உண்மையாக இன்று ஒவ்வொரு மனிதனுடைய இலக்கு எதை நோக்கி செல்கிறது என்று பார்த்தால் இறைவனாலும், இறைத்தூதராலும் அங்கீகரிக்கப்படாத ஹராமான எந்த வழியிலும் இன்று 1000 சம்பாதிப்பவன் நாளை 50000 சம்பாதிக்கத் துடிக்கிறான். இவ்வாறு கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திலிருக்கும் மனிதன் வரை 2 கோடிக்கு சொந்தக்காரன் அதை 10 கோடியாக்க என்ன வழி? அதற்காக கொடுக்கல் வாங்கலில் துரோகம் செய்வதும், அடுத்தவருக்கு சொந்தமான சொத்தை அல்லது பொதுச் சொத்தை அபகரிப்பதும் அதையும் மிஞ்சி சொத்து சேர்ப்பதில் இடையூராக இருப்பவனைக் கொலை செய்யக்கூட அஞ்சாத உள்ளம். இருண்ட வாழ்க்கையின் இச்சையை நோக்கி செல்லும் மட்டரகமான அறிவு; இறைவன் அளித்ததைக் கொண்டு திருப்தியுறாத உள்ளம்; உலக இச்சையை தெய்வமாக்கிக் கொண்டது. தன்னுடைய அந்திய காலத்தில் தலை ஆடி கால் தடுமாறி சுகம் கெட்டப் பின்பும் மருத்துவரை நாடி உடல் நலம் பேண ஆசை. இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்து இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.
    மனிதனுக்கு வயது ஆகஆக அவனில் இரு செயல்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. ஒன்று பொருள் மீது பேராசையும், இரண்டு வயதின்மீது பேராசையும்தான் அவை. அனஸ்(ரழி) புகாரி, முஸ்லிம், திர்மிதி 
    இன்றைய முஸ்லிம்கள் உலக வாழ்வில் மூழ்கிப்போய் இஸ்லாத்தின் கடமைகளை முழுமையாக பேணாமல் கலிமாவை உறுதிப்பாடில்லாமல் வாயளவில் ஒப்புக்கொண்டு தொழுகையை சரிவர பேணாமல், வாரத்தில் ஒரு நாள் ஜும்ஆ தொழுகை தொழுதால் போதும் என்றும், நோன்பை பேனாமலும், ஜகாத்தை முறையாக கொடுக்காமலும், ஹஜ்ஜுடைய காலங்களில் வசதி வாய்ப்பையும் பெற்றும் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்படாதவைகளை மார்க்கமாக எண்ணி ஊரறிய செய்து வழி அறியாதவன் திசைமாறி செல்வதைப்போல் உலக வாழ்வில் மூழ்கி குஃப்ரைத் தேடிக்கொள்கின்றனர்.
    அல்லாஹ் மனிதனுடைய உண்ணும் உணவிற்கும், உடுத்தும் உடைகளுக்கும், வசிக்கும் வீட்டைப் பற்றியும் மட்டும் உங்களிடம் கேள்வி கேட்கமாட்டான். ஹராமான வழியில் ஈட்டிய பிற சொத்துகளுக்கு உங்கள் மீது விசாரணை செய்வான். அந்த நேரத்தில் கைசேதப்பட்ட மக்களில் நாமும் ஒருவராகி விட வேண்டாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
    உதாரணமாக நம்ரூத் என்பவன் மிகப்பெரிய அளவில் தேசங்களை ஆண்டான். அவன் அல்லாஹ்விற்கு எதிராக பல சவால்களை விட்டான். மேலும் சுவனபதியின் வருணனைகளை கேள்விப்பட்டு நான் ஒரு சுவர்க்கத்தை அமைத்துக் காட்டுகிறேன் என்று நிறைய செல்வங்களை திரட்டி சொர்க்கத்தை போல ஒன்றை அமைத்தான். ஆனால் அதில் அவன் பிரவேசிக்கும்போது அவனுடைய உயிரை மலக்குகள் வந்து கைப்பற்றி சென்றனர். அவனுடைய ஆடம்பர வாழ்க்கையின் ஆணிவேர் பறிக்கப்பட்டு மாண்டு போனான்.
    அவ்வாறே மூஸா(அலை) அவர்களுடைய சமூகத்தில் காரூன் என்பவன் வாழ்ந்தான். அவன் அந்த சமூகத்தாரின் மீது அட்டூழியம் செய்தான். அல்லாஹ் அவனுக்கு ஏராளமான பொக்கிஷங்கள் அளித்ததின் காரணமாக அச்செல்வங்கள் அவன் கண்ணை மறைத்துவிட்டன. அவனுடைய கஜானா சாவியை சிரமத்துடன் சுமந்து செல்லும் அளவில் இருந்தது(28:76) அதனால் அவன் கர்வத்துடம் தனது சமூகத்தாரிடம் நடந்து கொண்டான். இன்னும் இவை அனைத்தும் என்னுடைய அறிவின் வல்லமையால் நான் சம்பாத்தித்தவை என்று கூறி கர்வமடித்தான்.
    அவனுடைய சமூகத்தார் இவனை மிகவும் பெரும் அதிஷ்டசாலி என்றும் கூறினர். ஆனால் அல்லாஹ்வின் வேதனையில் அகப்பட்டு அவனும், அவனுடைய செல்வங்களும், வீடுகளும் பாதாளத்தில் சொருகப்பட்டு மாண்டு போனான். அவனைப் பெரும் அதிஷ்டசாலி என்று கூறிய அவனுடைய சமூகத்தார் அவனுடைய பேரழிவை கண்டு அல்லாஹ்வின் கிருபை இல்லாதிருந்தால் நாமும் இவ்வாறே அழிந்திருப்போம் என்று கூறினார்கள்.
    இன்று  சில பகுதிகளில் தொழுகையப் பேணக்கூடிய முஸ்லிம்களில் சிலர் மறைமுகமாக வட்டித்தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகின்றனர். ஆனால் அல்லாஹ் அதை பார்த்துக் கொண்டிருக்கின்றான். வழிதவறி வந்த செல்வங்களை வழிதவறியே வெளியேற்றிவிட அல்லாஹ் வல்லமை படைத்தவனாக இருக்கின்றான். தேடியவனே அனுபவிக்க முடியாமல் செலவத்திரட்டுகள் அழிந்து போவதை நாம் கண்ணால் காணவில்லையா? அல்லது தகப்பன் தேடிய செல்வங்கள் பிள்ளைகளால் அழிவதை நாம் காணவில்லையா?
நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெªடிளியினால் ஆக்கியிருப்போம்.
    அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்). 
தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக்கொடுத்திருப்போம்) ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம். [43:33-35]   
    அதனால்தான் உலகவாழ்வின் மேல் மனிதன் கொண்ட உவப்பைத் தடுக்க நபி(ஸல்) அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களிடம் ஒரு அறிவுரை கூறினார்கள். “இப்னு உமரே நீர் காலையில் எழுந்திருக்கும்போது உன் மனதில் நான் மாலை வரை உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. மாலையானால் நாம் காலையில் உயிரோடிருப்பேன் என்று எண்ணாதே. உயிர்வாழ்தில் மரணத்துக்கு வேண்டிய ஆவணங்களை தயார் செய்துகொள். நாளை கியாமத்தில் அல்லாஹ்விடன் உன் நிலை எப்படியிருக்குமோ உனக்குத் தெரியாது” என்று அறிவுரை கூறினார்கள்.
இந்த அறிவுரையை ம்னதில் கொண்டு ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டிய வழியில் பொருளீட்டி செல்வநிலை அடைந்து உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அனாதை மக்களுக்கும் உதவி புரிந்து அழிவில்லா நிலையான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக ஆக்கிக்கொள்ளவும் நம்ரூது, காரூனின் நிலையை விட்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காத்து நல்லருள் புரிவானாக ஆமீன்.
அபூ அப்துர்ரஹ்மான்

11/15/2012

அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!


Post image for அல்குர்ஆனில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானம்!
உலகத்தில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறிமறையாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 1431 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் வின் தூதர் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட இந்த புனித குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக தந்ததுடன் வாழுகின்ற மக்களுக்கு இது சட்ட நூலாகவும், விண்ணியல், மண்ணியல், தாவரவியல், கருவியல், சமுத்திரவியல், விலங்கியல் என்று பல தரப்பட்ட விஞ்ஞானங்களை எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.
அன்றைய காலகட்டத்தில் நவீன விஞ்ஞான வளர்ச்சிகளே இல்லாத காலத்தில் இறக்கி அருளப்பட்ட இந்த குர்ஆன் இன்று விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தைப் பேசுவது பலதரப்பட்ட மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பல அறிஞர்களை ஆராய்ச்சி பண்ண தூண்டுகிறது.
“இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்குர்ஆன் 47:24 “ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?’ 4:82 என்று அல்லாஹ் கேட்கிறான்.
“நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? இன்னும் மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?’ 78:6, 7
“இன்னும் இப்பூமி சாயாமலிக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். 21:31
நாம் வாழுகின்ற இந்த பூமியின் மேற்பகுதி கடினமாக அமைந்துள்ளது. இதில்தான் உயிரினங்கள் வாழ முடியும். ஆனால் பூமியில் ஆழத்தின் உள்ளே உள்ள கீழடுக்குகளோ, மிகவும் வெப்பம் நிறைந்ததாகவும், திரவ நிலையிலும் உள்ளது. எனவேதான் பூமியின் கீழ் பகுதியில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆதலால் தான் அல்லாஹ் பூமியை உருண்டை வடிவில் படைத்த போதிலும், உயிரினங்கள் வாழும் பகுதியை குறிப்பிடும் வகையில்தான் இப் பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? என்று வினா எழுப்பியுள்ளான்.
பூமியில் வாழும் உயிரினங்கள் ஆடி சாயாமலிருக்கவே மலைகளை உருவாக்கி அவற்றின் வேர்கள் பூமிக்குள் ஆழமாக ஊடுருவி நிற்பதாகவும் அல்குர்ஆன் கூறியதை ஆராய்ந்து பார்த்த அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஃபிராங் பிரஸ்லின் என்பவர் தனது நூலில் அல்குர் ஆனின் கூற்றை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்.
“இந்த பூமியை வசிக்கத்தக்க இடமாக ஆக்கியவனும் அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக மலைகளை உண்டாக்கிய வனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் வேறு நாயன் இருக்கின்றானா? இல்லை எனினும் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
“கடல்களை பற்றி அல்லாஹ் கூறுகையில் இர ண்டு கடல்கள் அவற்றிற்கு இடையில் ஒரு தடுப்பு இருக்கிறது’ என்றும் கூறுகிறான். 97:19,20
“மேலும், ஒன்று மிக்க இனிமையும், சுவையுமுள்ளது. மற்றொன்று உப்பும், கசப்புமானது. இவ்விரண்டிற்குமிடையே வரம்பை மீற முடியாத ஒரு தடையை ஏற்படுத்தியிருக்கின்றான். 25:53
அல்குர்ஆனின் கடலியல் வசனங்களை ஆராய்ச்சி செய்த கடலியல் நிபுணர் டாக்டர் ஜான்கூஸ்தோ எனும் அறிஞர் அதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அது எந்தப் பகுதியில் உள்ள கடல் என்ற விபரங்களைச் சேகரித்து எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் அமெரிக்கா வின் கொலரடோ பல்கலை கழகத்தில் மண்ணியல் துறை பேராசிரியராக உள்ள டாக்டர் வில்லியம் ஹை என்ற அறிஞரும் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தி இந்த விந்தைமிகு நிகழ்வு மத்திய தரைக் கடலுக்கும் ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பு உட்பட பல்வேறு இடங்களில் இந்த அற்புத நிகழ்வு ஏற்படுகிறது என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த கடல் நீரில் ஒரு பகுதி சுவையாகவும் ஒரு பகுதி உப்பு நீராகவும் இருக்கும். ஆனால் கடல் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆனால் அல்லாஹ் அதனை சாய்வான அமைப்பில் கண் புலன்களுக்கு புலப்படாத வகையில் தடுப்புக் களை ஏற்படுத்தி அதன் வழியே ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்கு செல்கிறது என்பதனை தெளிவாக விளக்கி உள்ளார். ஆதாரம்: Principles of Oceonography Davis P.92
கடல்களின் தன்மைகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் குர்ஆன் கூறும் வசனப்படி “ஆழ்கடல் பல இருள்களை போன்றதாகும்’ அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றொரு அலை. அதற்கு மேல் மேகம். இப்படி பல இருள்கள். சில, சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. “அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதை பார்க்க முடியாது’ என்று அல்குர்ஆனின் அந்நூர் 24:40ல் கடலின் தன்மைகளை உவமையுடன் விளக்கி கூறியதை நவீன கருவிகளின் துணை கொண்டு கடல் விஞ்ஞானி பேராசிரியர் துர்காராவ் என்பவர் ஆராய்ந்து கூறுகிறார். இவர் ஜித்தாவில் மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலை கழகத்தில் பணியாற்றியவர்.
எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல், 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள் மூழ்குவது இயலாத காரியம். ஆழ்கடல்களில் இருள் திரைகள் அடுக்கடுக்காய் படிந்து இருக்கிறது. ஆனால் உள்ளே ஓர் ஒளிக்கதிர் ஏழு வர்ணங்களை கொண்டுள்ளது. 30 முதல் 50 மீட்டர் வரை ஆரஞ்சு நிறமும், 50 முதல் 100 மீட்டர் வரை மஞ்சள் நிறமும், 100 முதல் 200 மீட்டர் பச்சை நிறமும், 200 மீட்ட ருக்கு அப்பால் நீல நிறம், கருநீலம், ஊதா நிறங்களாக நீருக்குள் ஊடுருவிச் செல்கின்றன. அது முதல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. Ocean Eider and Pernetta P. 27
“ஆழ்கடலில் ஏற்படும் பல இருள்களைப் போன்றதாகும்’ என்ற குர்ஆனின் வசனத்தில் கூறப்பட்டவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார் பேராசிரியர் துர்காராவ். கடல்களை நாம் பல்வேறு பிரிவுகளாக பிரித்து பசுபிக்கடல் என்றும், அரபிக்கடல் என் றும் மத்திய தரைக்கடல் என்றும் அட்லாண்டிக் கடல் என்றும் பாக்ஜலசந்தி என்றும் மன்னார் வளைகுடா என்றும் பெயர் கூறி அழைக்கின்றோம்.
இந்தக் கடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் விதவிதமான அமைப்புகளும், அபூர்வங்களும் நிறைந்து காணப்படுகின்றன. வல்ல இறைவன் உலகத்தை படைத்து 3/4 பகுதி கடலின் பரப்பளவை நீட்டியும் 1/4 பகுதி மட்டுமே நிலப்பரப்பையும், அதில் மலைகளையும் ஏற்படுத்தி உள்ளான். நம் தமிழ்நாட்டில் பாக்ஜலசந்தியும், மன்னார் வளைகுடாவும் உள்ளது. இந்த மன்னார் வளை குடாவில் ஓர் அற்புதத்தை இறைவன் கடலுக்குள் ஏற்படுத்தி உள்ளான்.
கடலுக்குள் மிக அலங்காரமாகவும், பிரமிப்புவூட்டும் விதமாகவும் அழகிய வடிவங்களுடன் வித விதமான தோற்றத்தில் கோரல் எனும் பாற்கல்கள் (Corel Reef) வளர்ந்து இருக்கின்றன. இந்தக் கோரலை தற்போது பவளப்பாறைகள் என்று மிகக் கெளரவப்படுத்தி அழைக்கின்றனர். இதில் வளர்ந்து நிற்கும் பாசிகள் மீன்களுக்கு உணவாகவும் அமைந்துள்ளது. அதனை உட் கொள்ள வரும் மீன்கள் அந்த நிழல்களில் இருப்பிடத்தில் ஓய்வு பெறும் நிலையையும் அடைகிறது. மீன் இனத்தை பெருக்கும் நிலைகள் உருவாகிறது.
இவற்றையயல்லாம் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் வளரும் பாசியினை ஆராய்ந்து பார்த்தார்கள். அந்த பாசியில் தாது உப்புகள், விட்டமின்கள், அயோடின், அமீனோ அமிலங்கள் புரோத சத்து, கொழுப்பு சத்து மற்றும் ஹார்போ ஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது என்றும் கண்டு பிடித்தார்கள்.
உலகம் வெப்பமாகக் கூடிய காலமாக மாறி வருவதாலும் விளை நிலங்கள் விலைபோகக் கூடிய நிலையில் இருப்பதாலும் வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் உணவு பஞ்சத்தில் சிக்கும் நிலை ஏற்படும் என்று அறிஞர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் மனிதனை படைத்த அல்லாஹ் அல்குர்ஆனிலே கல்லுக்குள் இருக்கும் உயிரினங்களுக்கும் உணவளிக்கிறோம் என்று சொன்ன வசனத்திற்கு ஒப்ப உலகம் முடியும் வரை வரக்கூடிய மக்களுக்கும் உணவளிப்பான்.
கல்லுக்குள் உள்ள பாசியை மீன்கள் உணவாக உட்கொள்வதை சுட்டிக்காட்டியுள்ள வசனத்தின்படி இந்த வகை பாசிகளை ஆராய்ந்த மண்டபம் முகாம் மத்திய கடல் ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) மண்டபம் மத்திய மண் பரி சோதனை நிலையம், மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Central All Research Centre) போன்றவை கடல் பாசிகளை வரும் காலத்தில் மனிதன் உணவாக உட்கொள்ளக்கூடிய காலம் வரும் என்று கூறி தற்போது இந்த கடல் பாசியை ஜெல்லி, ஜாம், சூப் பவுடர், ஊறுகாய், பிரியாணி போன்ற உணவு வகைகள் வெளி நாடுகளில் தயாரிக்கப்பட்டு உணவாக உட்கொண்டு வருகின்றனர். மருந்துக்கும், வேளாண்மை உரம் இவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
இது மேலும் விரிவாகி பல்வேறு உணவு வகைகள் தயாரிக்க கூடும் என்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் கருத்துக் கூறியுள்ளனர். எதிர் காலத்தில் உணவு பற்றாக் குறைக்கு ஓர் முற்றுப் புள்ளியாக திகழும் என்றும் நம்புகின்றனர். ஆதலால்தான் தற்போது இந்த பாசிகளை வளர்ப்பதற்கு தமிழக அரசு மீன்துறை மூலமாக பயிற்சி அளித்து கடலில் பாசி வளர்க்க ஊக்குவித்துள்ளனர். தற்போது நமது கிழக்கு கடல் பகுதிகளை தேர்வு செய்து 500 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பாசி வளர்ப்பினால் பிராண வாயுவும் பவளப் பாறையின் நுண்ணுயிர்களும், கடல் வாழ் உயிரினங்கள் வளர்ச்சியாகி சுற்றுச்சூழல் வெப்பம் தணிந்து குறித்த காலங்களில் மழை பொழியவும் செய்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வில் தெளிவு படுத்துகின்றனர். கல்லுக்குள் உள்ளவைகளுக்கும் உணவளிப்பதை கூறிய வல்ல இறைவன் அந்த கல்லுக்குள் வளரும் பாசிகள் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய காலமும், வரும் காலமும், பயனளிக்கிறது என்று உணர்ந்த விஞ்ஞானிகள் குர்ஆனின் கடலியல் வசனத்தை ஆராய்ந்து பார்த்து வியந்து போய் உள்ளனர்.
அல்லாஹ்வின் நெறிநூலில் புதைந்து கிடக்கும் இந்த சமுத்திரவியல் உலக மக்களுக்கு வழி காட்டும் நூலாகவும், வாழ்வளிக்கும் ஒளிச் சுடராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறதிலிருந்து அறிந்து கொண்டோம்.
மண்டபம் M. அப்துல் காதிர்

PHOTOSHOP கற்க வேண்டுமா இதோ உங்களுக்காக தமிழில் வீடியோ டுடோரியல் (190MB )

PHOTOSHOP கற்க வேண்டுமா இதோ உங்களுக்காக தமிழில் வீடியோ டுடோரியல்  வழங்கபட்டுள்ளது .இதை டவுன்லோட் செய்ய கீழே உள்ள
டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .






பல வலைதளங்கள் PHOTOSHOP பற்றிய செய்முறையை தமிழில் வழங்கியுள்ளது .இருந்தாலும் அதை வீடியோ டுடோரியலாக வழங்கும் போது நண்பர்களுக்கு இன்னும் அதிக படியான புரிகிற தன்மை வளரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது .ஜான் என்ற நண்பரின் முயற்சியால் இந்த வீடியோ உருவாக்கபட்டது .இந்த பதிவின் பெருமை அவருக்கு சேரும் .

இந்த வீடியோ PHOTOSHOP என்றால் என்ன அதனுடைய் டூல்ஸ் எவ்வாறு உபயோகிப்பது மற்றும் LAYERS பற்றிய செய்முறைகள் அனைத்தையும் விளக்குவதால் இது கண்டிப்பாக PHOTOSHOP கற்க துடிக்கும் நண்பர்களுக்கு இது விருந்தாகும் என்பதில் எனக்கும் சந்தோசம்தான் .

டவுன்லோட் பைல் WIN RAR கொடுத்துளேன் இதை EXTRACT HERE செய்வதன் மூலம் உங்களுக்கான வீடியோ பைல் ஓபன் ஆகும் .உங்களுக்கு டைம் இருந்தா கருத்து பெட்டியில் எதாச்சும் கிறுக்கிட்டு போங்க .........

டவுன்லோட் லிங்க் :
 RAPIDSHARE
 ZIPPYSHARE 

11/13/2012


வட்டி உண்ணுதல்

Post image for வட்டி உண்ணுதல்
அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய கொடிய குற்றம் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)
தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர் என்றால் நிச்சயமாக அது வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களினால்தான். வட்டியை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கி வளமிக்க நாடுகளில் இடம்பெற முடியாதநிலை. வட்டியின் காரணத்தால் எத்தனையோ பெரும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இழுத்து மூடப்படுகின்றன. உழைப்பாளிகளின் வேர்வைகளால், முடிவடையாத வட்டியை நிறைக்கவே முடியாதநிலை. இதனால் பொருளாதாரம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கின்றது. பலர் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறனர். வட்டியில் ஈடுபடுபவர்களுடன் அல்லாஹ் போர் தொடுக்கின்றான் என்ற எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட இருக்கலாம்.
வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!
வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.
நபி(ஸல்)அவர்கள் இதன் இழிவான நிலையை இவ்வாறு கூறுகிறார்கள்:
வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)
வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)
வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)
வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:
மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)
இதுவே நீதமான தீர்ப்பாகும். இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும், இதன் கோரநிலைகளை உணர்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
நிர்ப்பந்தமாகவோ, பொருள் வீணாகிவிடும் அல்லது திருடப்பட்டுவிடும் என்ற பயத்திலோ வட்டியின் தொடர்பில் இயங்கும் பேங்கில் பணத்தை சேமிப்பவர்கள் உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான் உள்ளார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறந்தவற்றை சாப்பிடும் நிர்ப்பந்தத்தைவிட இது மிகவும் கடுமையான நிர்ப்பந்தமாக இருக்கின்றதா? என்று கவனிக்கவேண்டும். முடிந்தவரை மாற்று ஏற்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும். அதுவரை தனது இச்செயலுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்க வேண்டும்.
மேலும் அவர் எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை மார்க்கம் அனுமதிக்கும் ஏதேனும் செயலுக்காக கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் அந்தப் பொருளை அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.
 ஜமாஅத்துல் முஸ்லிமீன் அடியக்கமங்கலம்

பழி சுமத்தும் இழி செயல்

Post image for பழி சுமத்தும் இழி செயல்
மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.
இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஏழை மனிதர்கள் யார் என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) எங்களில் பொருள் வசதி இல்லாதவர்தான் ஏழை மனிதர் என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி (ஸல்) அவர்கள் கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.
ஆக இத்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
தப்பெண்ணம் கொண்டு பழி சுமத்தும் இழி செயல் தான் நபித்தோழர்களையும், நபி உறவினர்களையும் ஷஹீதாக்கப்பட தூண்டுகோலாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.
அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிளி.  பிறர் மீது பழி சுமத்தும் இழி செயலை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக!
FacebookTwitterEmailPrintFriendly