1/26/2013

விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு

255

விண்டோஸ் கணினிகளின் வேகத்தை அதிகரிப்பதற்கு

அதிகளவான கணினிப் பாவனையாளர்களால் விண்டோஸ் இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் அன்றாடம் இவ் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மென்பொருட்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணினிகளின் செயற்பாட்டு வேகத்தினை மந்தமையாது பாதுகாப்பதுடன், வேகம் குறைந்த கணினிகளின் செயற்பாட்டை அதிகரிப்பதற்கு என Avira System SpeedUp எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து வகையான விண்டோஸ் இயங்குதளங்களிலும் செயற்படவல்ல இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தின பின்னணியில் செயற்பட்டு கோளாறுகளை சுட்டிக்காட்டுவதுடன் தானாகவே சரிசெய்யக்கூடியதாக காணப்பகின்றது, அத்துடன் தேவையற்ற கோப்புக்கள், குக்கீஸ் போன்றவற்றினையும் நீக்குகின்றது.
இவை தவிர File Encryption, Startup Manager, Smart Defragmenter, Disk Analyzer, Uninstaller போன்ற வசதிகளையும் இம்மென்பொருள் உள்ளடக்கியுள்ளது.

1/07/2013

VLC media Player - நமக்கு தெரியாத சிறப்பம்சங்கள்




VLC Player மென்பொருள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பெரும்பாலும் இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோக்களை காண்போம். இது மட்டுமல்லாமல் பல்வேறு வசதிகளும் இதில் அடங்கி உள்ளது.
Audio/Video/Subtitle போன்றவை Sync ஆகாத பிரச்சினையை சரி செய்வது எப்படி?
  • சில சமயம் வீடியோவை Play செய்தால் அதில் உள்ளவர் பேசி முடித்த சில நொடிகள் கழித்தே டியோ வரும்.
  • அதே போலவே சப்டைட்டிலும். இந்த பிரச்சினையை VLC மூலம் நீங்கள் சரி செய்யலாம்.
  • VLC Player-இல் Tools -> Track Synchronization என்பதில் சென்று எத்தனை நொடிகள் மாற வேண்டும் என்று கொடுத்தால் போதும்.
Watermark ஆக நமது பெயர்/படம் கொடுப்பது எப்படி?
  • சில நேரங்களில் நாம் வீடியோ எடிட் செய்யும் போது ஏதேனும் வாட்டர் மார்க் போட நினைத்து மறந்து இருப்போம், அலுவலகம் அல்லது வேறு ஏதேனும் இடத்தில் அதை Play செய்யும் போது நமது பெயர் வரவேண்டும் என்று நினைத்தால், முறையில் VLC Player-இல் அதை செய்து விடலாம்.
  • Tools -> Effects and Filters -> Video Effects tab-> Vout/Overlay என்பதில் இது இருக்கும். ஏற்கனவே லோகோ இருந்தால் அதை பயன்படுத்தலாம், அல்லது வெறும் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தலாம், ஏற்கனவே உள்ள லோகோவையும் அழிக்கலாம்.
Video வை வேறு Format க்கு Convert செய்வது எப்படி?
  • நிறைய பேர் இதற்கு வித விதமான மென்பொருட்கள் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அவை எதுவுமே தேவை இல்லை. VLC Player ஒன்றே அதை செய்து விடும்.
  • Media-> Convert/Save இதில் Add File என்பதை கிளிக் செய்து Convert ஆக வேண்டிய வீடியோவை தெரிவு செய்து Convert/Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • வரும் பகுதியில் Destination File என்பதில் Output பெயர் கொடுக்கவும். இது .PS என்று முடியும். இதற்கு அடுத்து, செட்டிங்க்ஸ் icon மீது கிளிக் செய்தால் என்ன Format என்று தெரிவு செய்யலாம். (வீடியோ கோடெக், ஆடியோ கோடெக், சப்-டைட்டில் சேர்த்தல் என பலவும் உள்ளது) படத்தை பெரிதாக காண அதன் மீதி கிளிக் செய்யவும்.
Video Play ஆகும் ஸ்க்ரீன் அளவை மாற்றுவது எப்படி?
  • இது நிறைய பேருக்கு தெரிந்த வசதி என்றாலும் தெரியாதவர்களுக்கு. Video --> Crop என்பதில் உங்களுக்கு வசதியான ஒன்றை நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.

1/05/2013

கம்ப்யூட்டரைப் பராமரிக்க கையடக்க புரோகிராம்கள்





கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வருகிறது. எத்தகைய அலுவலகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர்வாகம் இயக்கப் படுகிறது. அதே போல தனி நபர் வாழ்க்கையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது.
மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதனாலேயே கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், அதனைத் தீர்ப்பதற்கு அதற்குரிய டெக்னீஷியனை நாடாமல் நாமே ஓரளவில் தீர்த்துக் கொள்ள முயல்கிறோம். இதற்குக் காரணம் பெரும்பாலான பிரச்னைகள், நாமே தீர்த்துக் கொள்ளும் அளவிலேயே இருக்கும். எனவே நம்மிடம் கம்ப்யூட்டரில் அவ்வப்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம்கள் எப்போதும் இருப்பது நல்லது. இவற்றை ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்துக் கொண்டால், நமக்கும் நம் நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும். அத்தகைய புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள புரோகிராம்கள் அனைத்தும், ஒரு பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் புரோகிராம்களே.
1. சூப்பர் ஆண்ட்டி ஸ்பைவேர் போர்ட்டபிள் ஸ்கேனர் (Super Anti Spyware Portable Scanner): உங்கள் பிளாஷ் ட்ரைவில் இது கட்டாயம் இடம் பெற வேண்டும். அத்துடன் இதன் அப்டேட் பதிப்புக்கு அடிக்கடி இதனை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அடிக்கடி இதற்கான அப்டேட் பைல் வெளியிடப்படுகிறது. வைரஸ் மற்றும் மால்வேர் பாதிப்பில்லாத கம்ப்யூட்டர் ஒன்றில் டவுண்லோட் செய்து, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றி வைத்துப் பயன்படுத்தலாம். பிரச்னைக்குள்ளான கம்ப்யூட்டரை சேப் மோடில் (safe mode) இயக்கிப் பின்னர் இதனைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரைக் காப்பாற்றலாம். இந்த புரோகிராமை http://www .superantispyware.com/portablescanner.html என்ற முகவரியிலிருந்து இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். 
2. ஹைஜாக் திஸ் (Hijack this): இது ஒரு ஸ்கேனர் அல்ல. போர்ட்டபிள் விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் ஒரு அலசும் டூல். பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுக்கும். அந்த ரிப்போர்ட்டிலிருந்து, கம்ப்யூட்டரைப் பாதிக்கும் வகையில் மால்வேர் இருந்தால் அறிந்து கொள்ளலாம். பின்னர் தெரிந்து கொண்ட மால்வேரை எப்படிக் கையாள்வது என்று அறிய, http://hjtdata.trendmicro.com /hjt/analyzethis/index.php என்ற முகவரி சென்று தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். 
3. ஏ.வி.ஜி. ரெஸ்க்யூ சி.டி. (AVG Rescue CD): விண்டோஸ் இயக்கத்தில் மால்வேர் மற்றும் வைரஸ் அறியும் ஸ்கேனர் புரோகிராமை இயக்க முடியவில்லையா? இந்த புரோகிராம் பயன்படும். இது லினக்ஸ் இயக்கத்தில் செயல்படும். சி.டி.யில் வைத்து இயக்கவும், ப்ளாஷ் ட்ரைவில் வைத்து இயக்கவும் தனித்தனியே இந்த பைல் தரப்படுகிறது. பெற்று பயன்படுத்தலாம். பெற்றுக் கொள்ளhttp://www.avg.com/usen/avgrescuecddownload.tplmcr8 என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். 
மால்வேர் அல்லது வைரஸ் பாதிப்பு மட்டுமே பிரச்னையாகாது. மேலும் பலவகை பிரச்னைகள், பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படும். பைல்கள் அழிக்கப்பட்டு கிடைக்காத நிலை ஏற்படலாம். ரெஜிஸ்ட்ரியில் தேவையற்ற குறியீடுகள் குவிந்து பிரச்னை ஏற்படுத்தலாம். சாப்ட்வேர் ஒன்றை நீக்குகையில், அனைத்து பைல்களும் அழியாமல் இருக்கலாம். இவற்றிற்கான சில போர்ட்டபிள் புரோகிராம்களை வைத்து இருப்பதுவும் நமக்கு முதலுதவி பெட்டி போல பயன்படும். அதற்கான புரோகிராம்கள் இதோ:
1.ரெகுவா போர்ட்டபிள் (Recuva Portable): அழிக்கப்பட்ட ஒரு பைலை மீண்டும் பெற நமக்குக் கிடைக்கும் புரோகிராம்களில், மிகச் சிறந்த புரோகிராம் இதுவாகும். பிரிபார்ம் நிறுவனம் இதனைத் தயாரித்து அளிக்கிறது. இதுவும் இலவசமே. இதனைப் பெற http://www.piriform.com/recuva/features/portableversion என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
2. சிகிளீனர் போர்ட்டபிள் (CCleaner Portable): பிரிபார்ம் நிறுவனம் தரும் இலவச புரோகிராம்களில் மிகவும் பிரபலமான, பயனுள்ள புரோகிராம் இதுதான். கம்ப்யூட்டரில் தங்கியுள்ள வேண்டத்தகாத பைல்கள் அனைத்தையும் நீக்கிக் கம்ப்யூட்டரைச் சுத்தப்படுத்தும் புரோகிராம் இது. ரெஜிஸ்ட்ரியையும் இது சுத்தப்படுத்தும். (இந்த வேலைக்கு மிக கவனம் தேவை). புரோகிராம்களை இதன் மூலம் முழுமையாக நீக்கலாம். எதற்கும் அடுத்த புரோகிராம் குறித்தும் அறிந்து கொள்ளவும். போர்ட்டபிள் சிகிளீனர் புரோகிராமினை இலவசமாகப் பெற http://ccleanerportable.en.softonic.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். 
3. ரெவோ அன்இன்ஸ்டாலர் போர்ட்டபிள் (Revo Uninstaller Portable): விண்டோஸ் புரோகிராம் ஒவ்வொன்றும், அதனைக் கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும் அன் இன்ஸ்டாலர் புரோகிராமுடன் இணைத்தே தரப்படுகிறது. விண்டோஸ் இயக்கமும் தன்னிடத்தே ‘Programs and Features’ மற்றும் ‘Add or Remove Programs’ போன்ற புரோகிராம்களை இந்த வேலைக்குப் பயன்படுத்தும் வகையில் கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய புரோகிராம்கள், பல பைல்களைக் குப்பையாகக் கம்ப்யூட்டரி லேயே தங்க விடுகின்றன. ஒரு சாப்ட்வேர் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்க வேண்டுமானால், ரெவோ அன் இன்ஸ்டாலர் போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தலாம். ரெவோ இந்த வகையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. http://www.revouninstaller. com/revo_uninstaller_ free_download.html என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனைப் பெறலாம். 
4. எச்.டி. ட்யூன் (HD Tune): இது தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமே இலவசமாகக் கிடைக்கிறது. இது ஒரு போர்ட்டபிள் புரோகிராம் அல்ல. ஆனால் இதனை விண்டோஸ் இயக்கத்தில் இன்ஸ்டால் செய்து, அப்படியே அதன் போல்டரை, பிளாஷ் ட்ரைவிற்கு மாற்றிப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஹார்ட் டிஸ்க், அதன் பைல் விபரங்கள் குறித்த பல்வேறு தகவல்களைத் தந்து, சிக்கல்களைத் தீர்க்க உதவிடும். http://www.hdtune.com/download. html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். 
மேற்கண்ட புரோகிராம்களை, ஒரு பிளாஷ் ட்ரைவில் வைத்திருப்பது நமக்கு பாதுகாப்பு. இவை எல்லாம் உங்களிடம் இருக்கிறது என்பது, நண்பர்கள் மத்தியில் ஒரு ஸ்டேட்டஸை அளித்திடும்.

1/04/2013

கணினியில் வைரஸ் உள்ளதா என்பதை எளியமுறையில் கண்டறிய(COMPUTER TIPS)

நமது கணினியில் வைரஸ் ஏதேனும் உள்ளதா என்பதை எவ்வாறு நாம் கண்டறிவது? இதற்கு பல ஆண்டி வைரஸ்கள் இருந்தாலும் இதனை நாமே  எளிய முறையில் கண்டுபிடிக்க முடியும். அது எவ்வாறு என்பதை இப்பொழுது பார்ப்போம்.





இதற்கு நாம் முதலில்  START --> RUN  திறந்துகொண்டு அந்த  RUN  பெட்டியில்  system.ini  என்ற வார்த்தையினை தரவேண்டும். தந்த உடன் Notepad மூலமாக ஒரு செய்தி திரை கீழ் உள்ளது போன்று தோன்றும்.






படத்தில் உள்ளது போன்று உங்கள் திரையில் தோன்றினால் உங்களது

கணினியில் வைரஸ் ஏதும் இல்லை என்பதாகும். அதற்கு மாறாக கீழே படத்தில் உள்ளது போன்று சிகப்பு நிறத்துடன் கூடிய நட்சத்திர குறி தோன்றினால் வைரஸ் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாம்.




வைரஸ் உள்ளது என்பதை இந்த சிகப்பு நிறக்குறி தெரியப்படுத்துகின்றது. எனவே நல்ல ஆண்டி வைரஸ் மூலம் அதனை நீக்க வேண்டும்.  இவ்வாறாக நாமே இந்த எளிய முறையின் மூலம்  நமது கணினியில் வைரஸ் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

1/02/2013

செல்பேசியில் தமிழைக் கொண்டு வர



செல்பேசியில் தமிழைக் கொண்டு வர  உங்கள் செல்பேசியில் ஒரு சிறிய மாற்றத்தை செய்தாலே போதுமானது.

இன்று இருக்கும் தொழில்நுட்ப உலகத்தில் இதெல்லாம் ஒரு சாதாரண வேலைதான். இன்னும் உங்கள் செல்பேசிகளில் நீங்கள் தமிழைப் படிக்க சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா?


தமிழில் உள்ள இணையப்பக்கங்கள் கட்டகட்டமாகவே காட்சியளிக்கிறதா? அப்படியென்றால் நீங்கள் இன்னும் பழைய தொழில்நுட்பத்தையே பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது உங்கள் மொபைல் பிரௌசரில் மாற்றத்தைக்கொண்டு வரவில்லை என அர்த்தம்.

சற்றும் தாமதிக்காமல் இந்த மாற்றத்தை உங்கள் மொபைலில் செய்துவிடுங்கள்..

தற்போதுள்ள எல்லா தமிழ்வலைப்பக்கங்களுமே Unicode தமிழில் எழுதப்பட்டதுதான். எனவே நீங்கள் எந்த மொபைலைப் பயன்படுத்திக்கொண்டிருந்தாலும் அதில் தமிழ்வலைப்பக்கங்களை எளிதாக காண முடியும்.

அதற்கு நீங்கள் உங்கள் மொபைலில் Opera Mini Browser பயன்படுத்தியிருந்தாலே போதுமானது. உங்கள் Opera Mini Browser-ஐப் பயன்படுத்தி வலைத்தளங்களை முழுமையாக பார்வையிட முடியும். எழுத்துகளும் சிதையாமல் சிறந்த முறையில் காட்சி அளிக்கும்.

மாற்றத்தை எப்படி செய்வது? 

உங்கள் செல்பேசியில் Opera Mini Browser நிறுவியிருக்க வேண்டும். Opera Mini Browser இல்லாதவர்கள் இந்த முகவரியில்  http://www.opera.com சென்று Opera Mini Browser -ஐத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளுங்கள்.


பிறகு நீங்கள் உங்கள் பிரவுசரில் ஏதாவது ஒரு தமிழ் வலைத்தளத்தை திறந்து பார்த்தீர்களானால் இப்படித்தான் காட்சி அளிக்கும்.

இவ்வாறு காட்சியளிப்பதை தவிர்க்க உங்கள் பிரௌசரின் அட்ரஸ்பாரில் about:config என தட்டச்சிட்டு Enter தட்டவும்.

உடனே புதிதாக ஒரு மெனு தோன்றும். அந்த Power user setting-ல் Use bitmap fonts for complex scripts என்பதில் yes என்பதை தேர்ந்தெடுங்கள்.

இப்போது கீழிருக்கும் Save என்பதை கிளிக் செய்து மாற்றத்தை சேமித்துவிடுங்கள்.

 

இப்போது உங்கள் மொபைலிலும் தமிழ் வலைப்பக்கங்கள் முழுமையாக தமிழில் படிப்பதற்கு ஏற்றவாறு காட்சியளிக்கும்.

நன்றி நண்பர்களே..!