4/05/2015

இறால் சாப்பிட்டு இளமையோடு இருங்கள்

சிக்கன், மட்டன் போன்ற உணவுப் பொருட்களை போன்று கடல் உணவுகளும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது.

அதில் மீன் முக்கியமாக இருந்தாலும், இறாலின் தனி சுவை காரணமாக மக்கள் அதை அதிகம் விரும்பிகின்றனர். இறாலின் சுவையை தாண்டி பல உடல்நலத்திற்கு நன்மை கொடுக்க கூடிய ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளது.

நம் விரல் அளவில் இருக்கும் இறாலை ஒரு பிடி பிடித்தால் அது இதய நோயை விரட்டியடிக்கும். மேலும், உடல் எடை குறைப்பதிலும், இளமை தோற்றத்தையும் கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண் பார்வை சிதைவு

இறால்களில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், அவை மாஸ்குலர் டீ-ஜெனரேஷன் எனப்படும் கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். மேலும் இதிலுள்ள அஸ்டக்ஸாந்தின் கண் வலிக்கு பெரிய நிவாரணியாக விளங்கும்.

தலை முடி உதிர்தல்

இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை நிற்கும். ஜிங்க் குறைபாடு இருந்தால், முடி உதிர்தல் ஏற்படும். தலை முடி மற்றும் சரும அணுக்களில் உருவாகும் புதிய அணுக்களை பாதுகாப்பதில் ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதயகுழலிய நோய்கள்

பல உணவுகள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் புளித்துப் போன இறால் பேஸ்ட்டில் பைப்ரினோலிடிக் என்சைம் உள்ளது. அதனால் அதனை இரத்த உறைவு முறிப்பான் தெரப்பிக்கு பயன்படுத்தலாம்.

இறால் பேஸ்ட்டில் உள்ள இந்த என்சைம், உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் தாக்கக் கூடிய இதயகுழலிய நோய்களால் ஏற்படும் ஆபத்தை எதிர்த்து போராடும்.

புற்றுநோயை எதிர்த்து போராடும்

இறாலில் அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு உள்ளதால், அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காக்கும். மேலும் அதில் செலினியம் என்ற அரியக் கனிமம் உள்ளது.

மாதவிடாய் பிரச்சனை

இறாலில் உபயோகமுள்ள கொழுப்பான ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் உள்ளது. இது பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியையும் குறைக்க உதவும்.

ஆகவே இதனை சாப்பிட்டால், இந்நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் இதர கொலஸ்ட்ரால் எதுவும் இல்லாமல் அவர்களின் பிறப்புறுப்புகளுக்கு சீரான முறையில் இரத்த ஓட்டம் இருக்கும்.

எலும்பு ஆரோக்கியம்

உணவில் போதிய வைட்டமின் மற்றும் புரதம் இல்லையென்றால், எலும்பின் தரம், திடம் மற்றும் ஒட்டுமொத்த திணிவில் சிதைவு ஏற்படும். இது ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய்க்கான அறிகுறியாகும்.

ஆனால் இறாலில் உள்ள புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.

மூளை ஆரோக்கியம்

இறாலில் கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. இது ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவையும் அதிகரிக்கும். இதனால் ஞாபக சக்தி, புரிதல் மற்றும் கவனம் போன்றவற்றில் முன்னேற்றம் தென்படும்.

இறாலில் உள்ள அஸ்டக்ஸாந்தின் ஞாபக சக்த்தியை அதிகரிக்கவும், மூளை அணுக்கள் உயிருடன் இருக்கவும், மூளை அழற்சி நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.

தைராய்டு ஹார்மோன்கள் சுரத்தல்

இறாலில் அயோடின் வளமையாக இருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அது உதவும். இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது.

எடை குறைப்பு

இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. ஆனால் அவற்றில் கார்போஹைட்ரேட் கிடையாது. அதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள். இந்த கடல் உணவை விரும்பி உண்ணலாம்.

வயதான தோற்றத்தை நீக்கும்

இறாலில் அஸ்டக்ஸாந்தின் என்ற கரோடெனாய்ட் அதிக அளவில் அடங்கியுள்ளது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது.

இது சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.

எனவே இறால்களை தினமும் அல்லது வாரம் ஒரு முறை எடுத்துக் கொண்டால் சருமத்தை அழகாக்க பெரிதும் உதவும்.           அன்புடன்   தாஜ்

4/15/2014

ஹதீஸ்களைத் தேடிச்சென்ற நபித்தோழர்கள்.....


இஸ்லாத்தின் முதல் இரு கலீபாக்களான அபுபக்ரு (ரழி), உமர்(ரழி) இருவரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் நபிவழிகளைத் தங்கள் நெஞ்சங்களில் பாதுகாத்து வைத்திருந்தனர். அக்காலத்தில் நபிமொழிகள் பல பாகங்கலிலும் பரவாமலேயே இருந்தன. காரணம், மிக மிக்கியமான நபித்தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களை மதினாவின் வெளியே செல்வதை உமர்(ரழி) அவர்கள் தடை செய்திருந்தனர்.
கலீபா உதுமான்(ரழி) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் உலகின் பல பாகங்களிலும் பரந்து செல்ல அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்காங்குள்ள மக்கள் நபிவழியைத் தெரிந்துகொள்ள இளைய நபித்தோழர்கள் பால் தேவைப்பட்டனர். காரணம், மூத்த நபித்தோழர்கள் இவ்வுலகைப் பிரிந்து கொண்டே இருந்தார்கள்.
நபிவழிகள் எதிர்கால மக்களுடைய பார்வைக்கு கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சிய இளைய நபித்தோழர்கள் பல சிரமங்களை மேற்கொண்டும், பல ஊர்களுக்கும் பிரயாணம் செய்தும் முதிய நபித்தோழர்களிடமிருந்து நபிவழியைத் திரட்டினார்கள்.
நபித்தோழர்களில் ஒருவரான ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) கூறுகிறார்கள்:

11/30/2013

16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது





1012223_646584548692929_1738061124_n

இதனை முழுமையாக படிக்கவும். படித்த பின் இதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும்.“திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள்ள ஒரு கப்பல்” பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்”எனவும் கூறப்பட்டது . (திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.

9/08/2013

அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா ?


                   Post image for அற்ப வாழ்வு மரணத்தை வெல்லுமா?
\எல்லாம் வல்ல அல்லாஹ் படைத்த உலகின் முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம்(அலை) முதல் இறுதி நபியான நபி (ஸல்) அவர்களும், அவர்களுடைய உம்மத்துகளில் கடைசி மனிதனாகப் பிறக்கக்கூடிய அனைத்து உயிர்களையும் அல்லாஹ் கைப்பற்றிவிடுவான் என்பதில் நாஸ்திகர்களைத்தவிர மற்ற எந்த கூட்டாத்தாருக்கோ அல்லது எந்த கொள்கையுடையோருக்கோ எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது என்பது திண்ணம். ஏனென்றால் எந்த ஆத்மாவும் இறை நியதிப்படி மரணத்திலிருந்து தப்பமுடியாது. அனைத்து ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரும். இதில் எந்த ஆத்மாவும் விதிவிலக்கல்ல. ஆனால் இன்றைய மனிதன் தன் உலக இச்சைக்கு அடிமையாகி அற்ப வாழ்வில் மூழ்கி மரணத்தை மறந்தவனாக நிலையில்லா வாழ்வின் விளிம்பில் நின்று இறைக்கட்டளைக்கு மாறாக உலக தேவைகளைப் பூர்த்தி செய்ய பகிரங்க முயற்சி செய்கின்றான்

9/07/2013

உங்கள் கைபேசிஎண் மறந்துவிட்டதா ?


அன்பு நண்பர்களே உங்கள் கை பேசி எண் மறந்துவிட்டதா கவலைவேண்டாம் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு இரகசிய எண் இருக்கும் உங்களிடம் எந்த நிறுவனத்தின் கைபேசி இருக்கிறதோ அந்நிறுவனத்தின் இரகசிய எண்ணை உங்கள் கைபேசில் இட்டு அழைப்பு கொடுத்தல் சில வினாடிகளில் கைபேசி எண் தெரியும்                                                                                                                                                   
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#  
  Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

                                                                                                                   அன்புடன்:                                                                                                                                                                   அதிரைதாஜ்

8/30/2013

Torch உலாவி - யூடுப் வீடியோ மற்றும் டோரன்ட் நேரடியாக பதிவிறக்கம் செய்ய

இணைய பக்கங்களை வலம்வர உலாவிகள் பயன்படுகிறன. முன்னனியில் உள்ள இணைய உலாவிகளான நெருப்புநரி, இண்டர்நெட் எக்ஸ்புளோரர், கூகுள் குரோம், சபாரி மற்றும் ஒபேரா போன்றவை அதிக பயன்பாட்டாளர்களை கொண்டுள்ளது. தற்போது மென்பொருள் சந்தைக்கு புதிய வரவான உலாவி டார்ச் மிகவும் பயனுள்ளதாகவும் பல்வேறு வசதிகள் நிறைந்துள்ளதாகவும் உள்ளது. இந்த டார்ச் உலாவியின் துணையுடன் இணைய பக்கங்களை மிக வேகமாக வலம் வர முடியும்.

மென்பொருளை தரவிறக்க சுட்டி